பிரபல நட்சத்திர லண்டன் ஹோட்டலில் தீ பலர் வெளியேற்றம்.

பிரபல நட்சத்திர லண்டன் ஹோட்டலில் தீ பலர் வெளியேற்றம்.

லண்டனில் உள்ள பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

நேற்று மதியம் சில்டர்ன் ஃப்பயிர் ஹாவுஸ் (Chiltern Firehouse) ஹோட்டலில் இச் சம்பவம் இடம்பெற்றதாக கூறபடுகின்றது.

20 தீயணைப்பு வாகனங்களும் சுமார் 125 வீரர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பட்டதாக லண்டன் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

ஹோட்டலில் முதல்மாடியில் மூண்டத் தீ நாலாவது மாடி வரை பரவியதாகவும், எனினும் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில்டர்ன் ஃப்பயிர் ஹாவுஸ் நட்சத்திர ஹோட்டலில் நட்சத்திரங்களும் பிரபலங்களும் வந்து தங்கும் இடமென கூறப்படுகின்றது. தீப்பரவலுக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி