அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார்.

இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார்.

அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டுவதே DODGE துறையின் கடமையாகும்.

இந்த நிலையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி