விமானப் போக்குவரத்து கனடாவில் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு

விமானப் போக்குவரத்து கனடாவில் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு

கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த புயலுக்கு எதிராக பல நாட்களாக முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கிரேட்டர் டொரொன்டோ விமான அதிகாரசபை (GTAA) பேச்சாளர் எரிக்கா வெல்லா தெரிவித்துள்ளார்

பனிப்பொழிவு ஏற்பட்டதும் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் விமானப் பயண ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளுமாறு கோரியுள்ளார்.

"இந்த குளிர்கால புயலை கையாள தயாராக இருக்கிறோம். இவ்வாரம் முழுவதும் பல பனிப்பொழிவுகளை சந்தித்துள்ளதால், இது நீண்ட வாரமாக இருந்தது," என்று வெல்லா தெரிவித்துள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி