கனடாவில் தேசிய கொடியை பனி படர்ந்த ஏரியில் உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

கனடாவில்  தேசிய கொடியை பனி படர்ந்த ஏரியில் உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில சிரேஷ்ட பிரஜைகள் பனி படர்ந்து உறைந்த ஏரியின் மேல் பாரிய அளவிலான தேசியக்கொடியினை வடிவமைத்துள்ளனர்.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் முயற்சி செய்து இந்த தேசிய கொடியின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கெலோனாவின் ஹாலிடே பாக் பகுதியில் வசிப்பவர்கள் இந்த கொடியை வடிவமைத்துள்ளனர்.

தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கொடி நாளை முன்னிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையிலும் தேசிய ஒற்றுமையை உறுதி செய்யும் வகையிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சின்னம் 320 அடி நீளத்தையும் 120 அடி அகலத்தையும் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.

விமானங்களில் இருந்து பார்க்கும் போது இந்த கொடியை தெளிவாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி