ரொறன்ரோவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்18 பேர் காயம்

ரொறன்ரோவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்18 பேர் காயம்

கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் விமானமொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் பதினெட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பியர்சன் விமான நிலையத்தின் ஓடு பாதையில் தரையிறங்கிய போது விமானம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

விமான நிலையப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதாகவும் கடுமையான பனிப்பொழிவு நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 80 பேர் பயணம் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி