மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவை என அறிவிப்பு

மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவை என அறிவிப்பு

கனடாவின் மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர நிர்வாகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் பாரிய பனிப்புயல் நகரை தாக்கி இருந்தது. இதனால் நகரத்தின் மீது சுமார் 70 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிப்பொழிவினை அகற்றுவதற்கு சுமார் எட்டு நாட்கள் வரையில் தேவைப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பனிப்பொழிவு காரணமாக வீதி போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பனிப் பொழிவுகள் ஏற்பட்டால் இந்த நடவடிக்கை மேலும் காலதாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்கள் மீதும் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுவதாகவும் இதனால் மக்கள் பெரும் அசவுகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி