தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கனடிய மரபுரிமைகள் அமைச்சர் அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கனடிய மரபுரிமைகள் அமைச்சர் அறிவிப்பு

கனடாவின் மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கல் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பில் அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

கனடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கூடுதல் நேரத்தை குடும்பத்துடன் கழிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெஸ்கால் லிபரல் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி