கனடாவில் நகைக் கடை கொள்ளை முயற்சியை மேற்கொண்டவர்களை தேடும் பொலிஸார்

கனடாவில் நகைக் கடை கொள்ளை முயற்சியை மேற்கொண்டவர்களை தேடும் பொலிஸார்

கனடாவின் வாகன் நகரில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கடந்த வாரம் நடந்த ஆயுத முனையில் கொள்ளை முயற்சியை மேற்கொண்ட நான்கு பேரை யோர்க் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 24ஆம் திகதி இரவு 9 மணியளவில் சென்வே பாலிவர்டு மற்றும் ஹைவே 427 பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கொள்ளை முயற்சி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை மூடப்பட்டதன் பின்னர் வெளியே வந்த ஒருவரிடம் நான்கு பேரும் கொள்ளையிட முயன்றுள்ளனர்.

குறித்த நபர் விரைவாக தனது வாகனத்திற்குள் நுழைந்து கதவுகளை பூட்டியதனால், கொள்ளையர்கள் அவரை அடைய முடியவில்லை. கொள்ளையர்கள், வாகனத்தின் ஜன்னலை சுத்தியல் கொண்டு அடித்து உடைக்க முயன்றுள்ளனர்.

மேலும் ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

எனினும் குறித்த நபருக்கு எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி