வடக்கு அல்பெர்டாவில் குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது.

வடக்கு அல்பெர்டாவில் குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது.

வடக்கு அல்பெர்டாவில் கடந்த வாரம் ஏழு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகியுள்ளார்.

இந்த சந்தேக நபர் மீது பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ம் திகதி இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு தகவல் வழங்கபட்டது.

ஒரு குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல், இன்னொரு குழந்தை சிறிய கத்திக் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதான கிராண்டு பிரெய்ரியைச் சேர்ந்த ஒரு நபர் மீது தாக்குதல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர் பின்னர் பிணையில் விக்கப்பட்டுள்ளார், மேலும் குறித்த நபர் மார்ச் 13 திகதி நீதிமன்றில்முன்னிலையாக உள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி