பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. கோவையிலும் இன்று ஒருசில பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னை மற்றும் கோவையில் இன்று (ஆகஸ்ட் 12) முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கநல்லூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்