கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியில் வசிக்கும் ஐந்து வயது மா. சிறுமி சோர்வாக வீடு திரும்பியுள்ளார். அங்கு பணியாற்றும் ஓவிய ஆசிரியை மாணவியை என்ன செய்தார் என்பது குறித்து அறிந்து பெற்றோர் ஆடிப்போனார்கள்.
இந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது சவாலான பணியாக மாறியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் கொடுமையாக அதிக அளவில் நடக்கிறது. தங்கள் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டில் வசிப்பர்கள், பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் போன்றவர்களால் சிறுமிகள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்டும் சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லக்கூட தெரியாது என்பதால், அது குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு வசதியாகவும் சில நேரங்களில் மாறிவிடுகிறது
அதேநேரம் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மிரட்டி சொல்லவிடாமல் தடுப்பவர்களும் உண்டு. பெற்றோர்களாக கண்டுபிடித்தே இது பற்றி புகார் அளிக்கிறார்கள் இப்படிப்பட்ட பாலியல் குற்றவாளிகளை போலீசார் அதிக அளவில் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓவிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரக பகுதி என்பது கேரள மாநில எல்லையை ஒட்டிய பகுதியாகும். இங்கு ஒரு தம்பதியின் 5 வயது மகள், உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் மிகவும் சோர்வாக வீட்டுக்கு திரும்பி உள்ளார். இதை கண்ட தாயார் அவரிடம் இதுபற்றி விசாரித்தார். அப்போது சிறுமி கூறிய பதிலை கேட்டு பெற்றோர் ஆடிப்போனார்கள். குழந்தை படிக்கும் மெட்ரிக் பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியை ஒரு அறைக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும் அவள் அந்தரங்க உறுப்பு வலிக்கிறது என பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர், உடனே பாடசாலை அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் இதுகுறித்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தனியார் பள்ளியின் ஓவிய ஆசிரியையான ஐஸ்வர்யா(26) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.