தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்துள்ள நடிகர் விஜய், அடுத்த மாதம் திருச்சியில் மிகப்பெரிய மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த மாநாட்டில் கட்சி கொடி, கொள்கைகளால் மாநாட்டில் விஜய் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி நடிகர் விஜய் சினிமாவை போல் அரசியலிலும் ஜொலிக்க இதை செய்தால் போதும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், படத்தில் நடித்துக்கொண்டே கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தற்போது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
முதலில் உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்தி வருகிறார். தற்போது கட்சியின் கொள்கைகள், கொடி போன்றவற்றை அறிமுகப்படுத்த மாநில அளவில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக திருச்சியில் இடங்களை தேர்வு செய்து வருகிறார். இதற்கிடையே திமுக எம்பி கனிமொழி நடிகர் விஜய் சினிமாவை போல் அரசியலிலும் ஜொலிக்க இதை செய்தால் போதும் என்று ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக எம்பி கனிமொழியிடம், அரசியலில் விஜய் ஜொலிப்பாரா? விஜய் அரசியலில் வெற்றி பெற என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி எம்பி கூறியதாவது:- விஜய் சின்ன வயதில் இருக்கும் போதே அவருடடைய குடும்பத்துடன் எங்களுக்கு நட்புறவு இருக்கிறது. இப்போது விஜய் பலரும் கொண்டாடக்கூடிய வகையில் வளர்ந்து இருக்கிறார்.
தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கான உழைப்பு, அதற்கான பாதையை அவர் தெளிவாக அமைத்து அதற்கான முயற்சிகளை செய்ததால் தான் இந்த உயரத்தை அடைய முடிந்தது. எனவே இதே தெளிவான உழைப்போடு, தெளிவான பாதையோடு பயணித்தால் சினிமாவை போல் அரசியலிலும் விஜய் ஜொலிப்பார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் சினிமாவில் தன்னை ஒரு ஹீரோவாக அடையாளப்படுத்த கடினமாக உழைத்தார். பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஹீரோவாகவும் மாறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முழுவதுமாக அரசியலில் ஈடுபடுவார் என்றும், அடுத்ததாக ஒரே ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபட உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை விஜய் பதிவு செய்தாலும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் டார்கெட் என்று கூறியிருந்தார். அதற்கு ஏற்றப்படியே ஒவ்வொரு நடவடிக்கைகளை விஜய் எடுத்து வருகிறார். கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது, கிராமங்கள் தோறும் நிர்வாகிகள் நியமிப்பது என அடுத்தடுத்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் கொள்கைகள், கொடி போன்றவற்றை அறிமுகப்படுத்த அடுத்த மாதம் மாநில அளவில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக திருச்சியில் மைதானத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.