மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை

மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை

உலகின் முதனிலை மின்சார உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுகாதார நிறுவனம் மற்றும் எல்.ஜீ நிறுவனம் என்பன குறித்த சில வகை மாடல் அடுப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளன.

அழி முன்புறத்தில் உள்ள பொத்தான்களை தவறுதலாக செயல்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, பயனர்கள் அல்லது செல்லப்பிராணிகள் தவறுதலாக தொடுவதால் நிகழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல்.ஜீ நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பெப்ரவரி 12ம் திகதி நிலவரப்படி, கனடாவில் இந்த கோளாறு காரணமாக 8 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், இரண்டு பேர் சிறிய அளவில் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த மின்அடுப்பு திரும்பப் பெறல் (recall) 2016 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட பல்வேறு மாடல்களை உள்ளடக்கியுள்ளது.

2016 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை 1,37,000 மின் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி