அமெரிக்க ஜனாதிபதி கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீது வரி விதிக்க திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீது வரி விதிக்க திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 வீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், சீனாவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 10% விதிக்கப்படும் வரியை இரட்டிப்பு செய்யப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

ட்ருத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவுக்குள் பென்டானில் (Fentanyl) போன்ற மயக்க மருந்துகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும், இதை தடுக்கவே இந்த வரிகளை அமல்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூர நிலைமை அமெரிக்காவை தொடர்ந்து பாதிக்க அனுமதிக்க முடியாது. எனவே, இதை முழுமையாக நிறுத்தும் வரை அல்லது கணிசமாக கட்டுப்படுத்தும் வரை, வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 4 முதல் அமலுக்கு வரும் வகையில் வரி விதிப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு அறிவிப்பு ஏற்கனவே உலக பொருளாதாரத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வரி விதிப்பினால் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும், ட்டோமொபைல் துறை பெரும் பாதிப்பு அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா, மெக்சிகோவுக்கு எதிராக 25% வரி, ஆனால் கனடிய எண்ணெய் மற்றும் மின்சாரத்திற்கு 10% மட்டுமே வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரிகளை பல நாடுகள் எதிர்த்துள்ள நிலையில், இது அமெரிக்காவுக்கே பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி