கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று தேர்தல்

கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று தேர்தல்

ஒண்டாரியோ மாகாண தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மாகாணம் முழுவதும் வாகளர்கள் தங்களது அடுத்த மாகாண அரசை தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளனர்.

ஒண்டாரியோவில் அடுத்த பொதுத் தேர்தல் ஜூன் 2026-ல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், டக் ஃபோர்டு (Doug Ford) கடந்த ஜனவரி மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (tariff) விதிக்கலாம் என்ற அச்சுறுத்தல், இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டால், ஒண்டாரியோ அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பில்லியன் டாலர் செலவிட வேண்டியதிருக்கும் போன்ற காரணிகளினால் இவ்வாறு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

ஆளும் கட்சி அரசியல் லாபத்திற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. டக் ஃபோர்டு – பிரோகிரசிவ் கன்சர்வேடிவ் (PC) கட்சி – மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வாக்களிக்க தகுதியானவர்கள் வாக்குச்சாவடிகளில் அடையாள ஆவணத்துடன் சென்று வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் மையங்கள் காலை முதல் இரவு வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வாக்குச்சாவடிகள் பற்றிய தகவல்கள் காணலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி