இதுவரையில் அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் இடம்பெற்றுள்ளன: நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு

இதுவரையில் அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் இடம்பெற்றுள்ளன: நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை அதிகபட்சமாக 260 ரூபாய்க்கு விற்கபட வேண்டும்.

அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் அல்லது அதிக பணம் கோரிய வர்த்தகர்களும் இருந்தால், அதிகாரசபையின் அவசர இலக்கம் 1977 க்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

கீரி சம்பா அரிசியை மையமாகக் கொண்டு, அரிசி தொடர்பான சோதனைகளை தொடர்ந்து நடத்தப்போவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி