கனடியர்கள் அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம்.

கனடியர்கள் அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம்.

அமெரிக்காவிலிருந்து கனடாவில் குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் கூறப்படுகின்றது.

குடியேற்ற சட்டத்தரணிகள் இது தொடர்பிலான விடயங்களை அறிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் 50% உயர்வு கண்டுள்ளன.

அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய முயற்சி செய்யும் பலர் போல அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வாழ்வது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது போல இல்லையென்று சிலர் தெரிவித்துள்ளனர்.

2025 அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று, கனடா மீது வரிகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வது நீண்ட செயல்முறை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி