டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்

டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இப்புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், மார்ச் 4ஆம் திகதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள் மற்றும் வலி நிவாரணிகள், மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்கு வருவதாகவும், இந்த போதைப்பொருட்கள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருட்கள் கடத்தப்படுவது நிறுத்தப்படும் வரை சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வரி விதிப்பால் உலகம் முழுவதும் பங்குச்சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி