கனடாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு நடைமுறையை ஒத்தி வைக்கும் ட்ரம்ப்

கனடாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு நடைமுறையை ஒத்தி வைக்கும் ட்ரம்ப்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் திகதி வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படாது என கனடா நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

2020 அமெரிக்கா - மெக்சிக்கோ - கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது. எனினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் அமுலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி