விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்

விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்

வென்னப்புவ புதிய சாலையில் உள்ள கோரக் காஸ் சந்திக்கு அருகே வௌ்ளிக்கிழமை (17) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் புஷ்பகுமார ஏகநாயக்க என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் மகள் மற்றும் வேன் ஓட்டுநர் காயமடைந்து உடனடியாக மாரவில அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குப் பின்னர், வென்னப்புவ பொலிஸாரால் மேலதிக விசாரணைக்காக வேன் கைப்பற்றப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி