அம்பலவன் பொக்கணை மாத்தளன் சாள்ஸ் வளாகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணி

அம்பலவன் பொக்கணை மாத்தளன் சாள்ஸ் வளாகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணி

பாலநாதன் சதீசன்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை.

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன் பொக்கணை, மாத்தளன் சாள்ஸ் மண்டப வளாகத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் பணிக்குழுவினரால் இன்றையதினம் (14.11.2025) மாலை ஆரம்பிக்கப்பட்டது

முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன

இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் தெரிவித்தனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி