கிளிநொச்சியில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் விழிப்புணர்வு திட்டம்

கிளிநொச்சியில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் விழிப்புணர்வு திட்டம்

பாலநாதன் சதீசன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் மற்றும்  சமூக ஒற்றுமை விழிப்புணர்வு திட்டமானது இன்றையதினம் (15.11.2025) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 39 இளைஞர்களின் பங்கேற்புடன் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது.

இவ் விழிப்புணர்வின் போது புரிதல் மற்றும் சமூக ஒற்றுமையை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம், மனித உரிமைகள் , சமூக அளவிலான மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது

NCEASL அனுசரணையில் , மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பினால் (HDO) ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன், கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜ்வினோத், திறன் மேம்பாட்டு அதிகாரி வி.விகிதா, இளைஞர் சேவைகள் அதிகாரி ஆர். தனுசா, மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திருமாறன் , கலாசார உத்தியோகத்தர், மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பின் உத்தியோகத்தர்கள் , இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி