புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த சின்னங்கள் அழிக்கப்படவில்லை- சாணக்கியன் கண்டனம்

புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த சின்னங்கள் அழிக்கப்படவில்லை- சாணக்கியன் கண்டனம்

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே இந்த சம்பவம் தொடர்பில் சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

அரசியல் செய்வதற்காக சட்டவிரோத விடயம் ஒன்றுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதை தயாசிறி ஜயசேகரவுக்கு தெரிவிப்பதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

சட்டவிரோதமான விடயங்களை எதிர்த்தாலும், மற்றொரு மதத்தின் சிலையை உடைக்கின்ற அளவுக்கு கேவலமான எண்ணம் கொண்ட இனம் தமிழினம் அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் தெரிவித்தார்

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி