யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது.

சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால், வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதிங்கி இருக்கின்றன.

அவ்வாறே சேதமடைந்த சிலையை கடலில் போட்ட நிலையில் அந்த சிலை வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த சிலை தற்போது வளலாய் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கரையொதிங்கியமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி