வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 3 ஆம் பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

கோபமடைந்த பெற்றோர் காயமடைந்த மாணவனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் நேற்று (07.04.2024) குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி