பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை 03-12-25 இல் சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். இந்த அமைப்பானது உலகநாடுகளில் உள்ள அனைத்து சத்திர சிகிச்சை நிபுணர்களை இணைத்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தை கொண்டது. யாழ் கைதடி மண்ணின் மைந்தனும், புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவருமான தவம் அவர்கள் மருத்துவ உலகில் நன்கு அறியப்பட்டவர்.
தற்போது அமெரிக்காவின் சான்போர்ட் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அடிக்கடி இலங்கை வருகை தந்து பல்வேறு சுகாதார நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வருவதோடு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் ஆரம்பிக்க காரணமான முக்கிய நபராக விளங்குகிறார்.
அமெரிக்க அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் IMHO (USA) உறுப்பினராக கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் பல தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். IMHO இலங்கையில் பல்வேறு சுகாதார கல்வி மற்றும் வலுவிழந்த வர்களுக்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
8ம் திகதி திங்கட்கிழமையன்று சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில், பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்கள் சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் அமையத்தின் (International College of Surgeons) உலக அமைப்பின் தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டதை காண்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்த நிகழ்விற்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து பல நிபுணர்கள் வருகைதந்து பல்வேறு நிலைகளில் பங்குபற்றினர்கள்.