நகைக்கடை திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது

நகைக்கடை திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது

தென்மேற்கு Ontario முழுவதும் நிகழ்ந்த பல நகைக்கடை திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Brantford, Guelph, Niagara பிராந்தியம், Peel பிராந்தியம், Quebec உட்பட பிற பகுதிகளில் நிகழ்ந்த பல நகைக்கடை திருட்டு சம்பவங்களுக்கு இவர்கள் பொறுப்பு என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளைகளுக்கு பொறுப்பானவர்கள் என நம்பப்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுவை அடையாளம் கண்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் பொதுவாக இரவு நேரத்தில் நடப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (12) அதிகாரிகள் Hamilton நகரில் உள்ள வீடுகளில் இரண்டு சோதனை நடவடிக்கைகளை நிறைவேற்றினர்.

மேலும் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனம்  உட்பட வேறு பல வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏராளமான சொத்துக்கள்

கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றில் திருடப்பட்ட BMW வாகனம் ஒன்றும் அடங்குகிறது.

மீட்கப்பட்ட பொருட்களின் முழுமையான பட்டியலை வெளியிட புலனாய்வாளர்களுக்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் எடுக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்:

36 வயதான Silviu Moraru – Stoney Creek

30 வயதான Ion-Ciprian Constantin – நிரந்தர முகவரி இல்லை

36 வயதான Mircea Drezaliu – – நிரந்தர முகவரி இல்லை

25 வயதான Ionut Stroe – Hamilton

36 வயதான Vasile Vasile – Brampton

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முழுமையான பட்டியல் காவல்துறையினரால் வழங்கப்படவில்லை.

மேலும் கைதானவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி