Liberal அரசில் இணைந்த மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர்!

Liberal அரசில் இணைந்த மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர்!

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Ma ஆளும் Liberal கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

Markham – Unionville தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது முடிவை வியாழக்கிழமை (11) அறிவித்தார்.

நத்தார் விடுமுறைக்காக சபை அமர்வுகள் நிறைவுக்கு வந்த சில மணித்தியாலத்தில் Liberal கட்சி வழியாக இந்த கட்சி மாறல் அறிக்கை வெளியானது.

Mark Carney தலைமையிலான அரசாங்கத்தில்  இணையும் முடிவை சபாநாயகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அறிவித்துள்ளதாக Michael Ma தெரிவித்தார்.

வியாழன் மாலை நடந்த Liberal நாடாளுமன்ற குழு விடுமுறை விருந்தில், Michael Ma பிரதமரினால் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்கப்பட்டார்.

Markham – Unionville  தொகுதி மக்களின் கருத்துக்களை சமீபத்திய வாரங்களில் கவனமாகக் கேட்டு, எமது நாட்டின் திசை குறித்து குடும்பத்தினருடன் சிந்தித்த பின்னர் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

கனடாவின் எதிர்காலத்திற்காக  ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது என தெரிவித்த Michael Ma, பிரதமர் Mark Carney நிலையான, நடைமுறை அணுகுமுறையை வழங்குவதாக தெரிவித்தார்.

Michael Ma முதன் முதலில் கடந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Michael Ma தனது தொகுதி மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என இந்த கட்சி மாற்றம் குறித்து Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

Michael Ma எதிர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட Liberal கொள்கைகளை ஆதரிக்க அவர் தேர்ந்தெடுத்துள்ளார் எனவும் Pierre Poilievre கூறினார்.

இந்த கட்சி மாறல் Liberal அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 171 ஆசனங்களை வழங்குகின்றது.

இது பெரும்பான்மை அரசாங்கத்தை விட ஒரு ஆசனம் குறைவானதாகும்.

Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 142 ஆக குறைந்தது.

Bloc Québécois 22 , NDP ஏழு, பசுமைக் கட்சி ஒன்று என ஆசனங்களை கொண்டுள்ளனர்.

கடந்த April மாதத்தில் Conservative கட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, இலையுதிர் காலத்தில் Liberal அரசாங்கத்தில் இணைந்த இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

முன்னாள் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont கட்சி மாறி சில வாரங்களில் இந்த கட்சி மாறல் அறிவித்தல் வெளியானது.

மூன்றாவது Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

அவர் தனது பதவி விலகல் அறிவித்தல் வெளியான பின்னர் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவோ அல்லது  வாக்களிப்பில் கலந்து கொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Calgary-யில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் Pierre Poilievre தலைமை மறு ஆய்வு வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு இரண்டு மாதங்களுக்குள் முன்னர் இந்த கட்சி மாற்றம் நிகழ்கிறது.

January மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் Conservative தலைவர் Pierre Poilievre தலைமைத்துவ மதிப்பாய்வை எதிர்கொள்கிறார்.

கட்சி உறுப்பினர்கள் அவர் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்போது, இந்த சமீபத்திய கட்சி விலகல் அவருக்கு அழுத்தம் கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி