இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி

விஜயரத்தினம் சரவணன்

வடபகுதி கடற்பரப்பில் இடம்பெறும் இந்திய இழுவைப்படகுகளின் அந்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் 12.12.2025இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள  யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலக வளாகத்திலிருந்து ஆரம்பித்த இவ்வார்ப்பாட்டப் பேரணி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம்வரை இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முற்றுகையிட்ட மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் குறித்த இடத்திற்கு வருகைதந்ததுடன், மாவட்ட செயலரிடம் இதன்போது மீனவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி