நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் சிலர் கட்சி மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
Markham – Unionville தொகுதி Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Ma கடந்த வாரம் ஆளும் Liberal கட்சியில் இணைந்த நிலையில் இந்த கருத்து வெளியானது.
அரசாங்கத்தில் இணைய மேலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனரா என்ற கேள்விக்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் Tim Hodgson, பலர் தன்னை தொடர்பு கொண்டுள்ளனர் என கூறினார்.
இது குறித்த பல விசாரணைகள் தன் வசம் வந்துள்ளன என Toronto-வில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கட்சி மாற Michael Ma எடுத்த முடிவில் தான் தனிப்பட்ட முறையில் வகித்த பங்கு குறித்த எந்தக் கருத்தையும் தெரிவிக்க Tim Hodgson மறுத்தார்.
Michael Ma பிரதிநிதித்துவப்படுத்தும் Markham-Unionville தொகுதி, Tim Hodgson பிரதிநிதித்துவப்படுத்தும் Markham-Thornhill தொகுதிக்கு அடுத்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Conservative கட்சியை விட்டு வெளியேறி Liberal அரசில் இணைய Michael Ma எடுத்த முடிவு Liberal அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 171 ஆசனங்களை வழங்கியது.
கடந்த April மாதம் நாடாளுமன்றத்திற்கு முதலில் தெரிவான Michael Ma தனது தொகுதியை சுமார் 1,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Michael Ma கட்சி மாற எடுத்த முடிவு குறித்து பல Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிர்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
November மாதத்திலிருந்து Conservative கட்சியை விட்டு வெளியேறும் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.
இதன் மூலம் Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 142 ஆக குறைந்தது.
வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர், Conservative கட்சியின் Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont கட்சி மாறும் முடிவை அறிவித்தார்.
சில தினங்களுக்கு பின்னர் Alberta மாகாண Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
Calgary-யில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் Pierre Poilievre தலைமை மறு ஆய்வு வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு இரண்டு மாதங்களுக்குள் முன்னர் அண்மைய இந்த கட்சி மாற்றம் நிகழ்ந்தது.
January மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் Conservative தலைவர் Pierre Poilievre தலைமைத்துவ மதிப்பாய்வை எதிர்கொள்கிறார்.
கட்சி உறுப்பினர்கள் அவர் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்போது, இந்த சமீபத்திய கட்சி மாற்றங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலில் கனடியர்கள் பிரதமருக்கு வழங்க மறுத்த பெரும்பான்மையை பெற Mark Carney முயல்வதாக Conservative தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.
Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் விரக்தியடைந்தவர்கள் உள்ளனர் என அரசாங்கத்தின் அவைத் தலைவர் Steven MacKinnon கடந்த வாரம் கூறியிருந்தார்.