கனடாவில் வொர்க் பெர்மிட் அல்லது பணி அனுமதி பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்பவருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கனடாவிற்கு விசிட் வீசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்கள் கனடாவில் இருந்து கொண்டு வொர்க் பெர்மிட் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்ய முடியாது என அறிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் விசிட் விசாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்களுக்கு பணி அனுமதிக்காக விண்ணப்பம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தரப்பினர் இந்த சலுகையை துஷ்பிரயோகம் செய்வதாகவும் இது நாட்டின் குடிவரவு முறைமையின் நேர்மை தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் நாட்களில் இந்த வொர்க் பர்மிட் நடைமுறைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக கனடிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசிட் வீசாவில் தற்காலிகமாக கனடாவிற்குள் வருகை தந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமலேயே பணி அனுமதி பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் தற்பொழுது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.