அவுஸ்திரேலியாவின் பொண்டி(Bondi) கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலை தந்தையும் மகனும் பல மாதங்களாக திட்டமிட்டும் நுணுக்கமாகவும் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் அந்த பகுதியில் உளவு பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் குறித்த இருவரும் அந்த பகுதியில் வெடிபொருட்களை வீசியுள்ளனர். ஆனால் அந்த வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என்பதால் அதன் பின்னர் அவர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 14 ஆம் திகதியன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவீத் அக்ரம் என்ற 24 வயதான நபர் ம மீது 15 கொலை குற்றச்சாட்டுகள் உட்பட59 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவரது தந்தை சஜித் அக்ரம் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.