டிட்வா புயலால் இலங்கைக்கு $4.1 பில்லியன் சேதம் – உலக வங்கி அறிக்கை

டிட்வா புயலால் இலங்கைக்கு $4.1 பில்லியன் சேதம் – உலக வங்கி அறிக்கை

இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கட்டிடங்கள், விவசாயம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் சேத மதிப்பீடு

4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதத்திற்கு சமம் என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய சேதங்கள் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் பதிவாகியிருந்தது. இதன்படி, கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் $689 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அதிகமாக தாக்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி