டிட்வா பேரிடரால் கிழக்கில் 33640 விவசாயிகள் பாதிப்பு

டிட்வா பேரிடரால் கிழக்கில் 33640 விவசாயிகள் பாதிப்பு

டிட்வா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண, மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் (25.12.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அடிப்படையில் பார்க்கின்ற போது திருகோணமலை மாவட்டத்தில் 15,389 ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட 23516 விவசாயிகளும், மட்டக்களப்பில் 2961 ஹெக்டேயரை சேர்ந்த 5009 விவசாயிகளும், அம்பாறையில் 2922 ஹெக்டேயரை சேர்ந்த 5115 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது வரைக்கும் சுமார் 3190 மில்லியான் ரூபா நஷ்டஈட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி