உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கனடிய பிரதமர்

உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கனடிய பிரதமர்

உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை கனடிய பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இரு நாட்டின் தலைவர்களும் வெள்ளிக்கிழமை (26) தொலைபேசியில் உரையாடினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் நான்கு ஆண்டு கால படையெடுப்பை தொடர்ந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த உரையாடல் நிகழ்ந்தது.

இந்த பேச்சுவார்த்தைகள் முழுவதும் உக்ரைனுக்கான கனடாவின் உறுதிப்பாட்டை கனடிய பிரதமர் Mark Carney உறுதிப்படுத்தினார்.

பேச்சுவார்த்தையை தொடர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் Mark Carney வலியுறுத்தினார் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உக்ரைன் விடயத்தில் கனடாவின் உறுதியான நிலைப்பாட்டிக்கும் தெளிவான அங்கீகரித்திற்கும் இந்த தொலைபேசி உரையாடலின் போது உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy நன்றி தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டு முதல் கனடா உக்ரைனுக்கு $ 22 பில்லியன் உதவியை வழங்கியுள்ளது.

தவிரவும் உக்ரைனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதற்கு உடந்தையாக இருந்த 3,300-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.