அறுகம்பையில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு; பாற்சோறு சமைத்து பிரார்த்தனை

அறுகம்பையில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு; பாற்சோறு சமைத்து பிரார்த்தனை

பாறுக் ஷிஹான்

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் சனிக்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது.

பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எனப்படுபவர் சுற்றுலா ஹோட்டல் செய்வதற்காக ஒருவருக்கு விற்பனை செய்த இந்த இடத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் பெற்று ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரன்டாக இயக்கி வந்தார் .

அத்துடன் இஸ்ரேலியர்கள் ஒன்று சேறும் இடமாகவும் பயன்படுத்தி வந்த நிலையில் அங்கு இஸ்ரேலியர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக சபாத் இல்லம் எனப்படும் இந்த இல்லம் குறித்து அண்மைக் காலமாக பல சர்ச்சைகள் எழுந்து வந்தன. சர்வதேச ரீதியாக இந்தப் பிரச்சினை பேசப்பட்டது.

இது தொடர்பாக குறிப்பிட்ட காணியை வழங்கிய தமீம் எனப்படுபவரும் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகி வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்து இது பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டது நீதிமன்றம் வரையும் சென்றிருந்தது.

இவ்வாறு மக்கள் மத்தியிலும் இது பெரும் பீதியை ஏற்படுத்தி இருந்தது இதனைத் தொடர்ந்து குறித்த காணியை விற்பனை செய்த தமீம் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் அதிக விலை கொடுத்து மீள பெறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று குறித்த இடத்தில் காணியின் உரிமையாளர் தமீம் தலைமையில் பால் சோறு வழங்கி துஆ பிரார்த்தனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித்   மற்றும் சட்டத்தரணி சாதீர் மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம் .முஷாரப் மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அப்துல் மஜீத் தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம், பிரஜா சக்தி உறுப்பினர்கள் , உலமாக்கள்,  சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சபாத் இல்லமாக இயங்கிய இடங்களில்  முதற்தடவையாக மீளப் பெற்ற இடமாக அறுகம்பையில் இயங்கிய இந்த இடம் மட்டுமே என்பது எல்லோராலும் பார்க்கப்படுவதுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனது இடத்தை மீளப் பெறுவதற்காக இரவு பகலாக முயற்சித்த பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றார்.

இந்த இடத்தை கொடுத்து நான் பட்ட கஷ்டங்களும் விமர்சனங்களும் ஏராளம்

எனவே இனி மேல் யாரும் இவ்வாறு இடங்களை விற்பனைக்கோ வாடகைக்கோ விட வேண்டாம் என அதன் உரிமையாளர் தமீம் கருத்துரைத்தார்.

இந்த விடயம் குறித்து ஆராயும் போது சில பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் முடியாத ஒரு விடயத்தை தமீம் எனும் ஓர் தனி நபரின் முயற்சியில் இந்த இடம் அதி கூடிய பணத்தை கொடுத்து  மீளப் பெற்றிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி