இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவை எதிர்கொள்ளும் Toronto!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவை எதிர்கொள்ளும் Toronto!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவை Toronto நகரம் எதிர்கொள்கிறது. இது புதன்கிழமை (14) இரவு முதல் Toronto நகரில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு வியாழக்கிழமை (15) மாலை வரை தொடரவுள்ளது.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் கனடா Toronto-விற்கு மஞ்சள் பனிப்பொழிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 10 முதல் 20 CM வரை பனி பெய்யும் என வானிலை முன்னறிவிப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பொழிவு எச்சரிக்கையுடன் வெப்பநிலை வீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கனடாவின் கூற்றின் படி, வியாழன் காலை வெப்பநிலை -9 சாக குறைந்து -22 வரை உணரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Toronto போலவே Durham, York, Peel, Halton, Hamilton, Niagara பகுதிகளில் உள்ள நகரங்களும் மஞ்சள் பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

புதன் இரவு முதல் வியாழன் காலை Toronto பெரும்பாகத்தின் சில பகுதிகளில் 5 முதல் 15 CM வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

Niagara, Prince Edward County போன்ற கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் 20 CM வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.