யாழில் 'பொங்கு தமிழ்' நினைவு நிகழ்வு!

யாழில் 'பொங்கு தமிழ்' நினைவு நிகழ்வு!

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'பொங்கு தமிழ்' நிகழ்வின் நினைவு நாளைய தினம் (17) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001ஆம் ஆண்டில் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன் போது, தமிழ்த் தேசியம், தன்னாட்சி உரிமை, மரபு வழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தவகையில் இந்தப் 'பொங்கு தமிழ்' நிகழ்வானது வருடா வருடம் அனுஷ்க்கப்படுவது வழமை. அதன்படி இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக 'பொங்கு தமிழ்' தூபியில், 'பொங்கு தமிழ்'

நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணிதிரள வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி