வடக்கில் தமிழர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்!

வடக்கில் தமிழர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்!

கிவுல் ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இந்தத் திட்டத்துக்கான நிதியை 2 ஆயிரத்து 345. 6 கோடி ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருடத்திலேயே கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் 2031ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யவும் நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் குடிதண்ணீர் பற்றாக்குறை, வறுமை, குறை விவசாய உற்பத்தித் திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாகவே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

எனினும், இது வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கிலும் - குடிப்பரம்பலை திட்டமிட்ட முறையில் மாற்றியமைக்கும் நோக்கிலும் கொண்டுவரப்படுகின்றது என்று இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கிவுல் ஓயா அபிவிருத்தி கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அன்றைய மதிப்பில் 417 கோடி ரூபா செலவில் மகாவலி எல் வலயக் கட்டமைப்பின் ஊடாக 4 வருடங்களில் இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இந்தத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி