அரசியலமைப்பு பேரவையின் புதிய மூன்று சிவில் உறுப்பினர்களாக பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை நியமிப்பதற்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சபையின் சிவில் உறுப்பினர்களாகப் பணியாற்றிய வைத்தியர் அனுலா விஜேசுந்தர, கலாநிதி பிரதாப் ராமானுஜம் மற்றும் பேராசிரியர் தினேஷா சமரரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 16ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து வெற்றிடங்கள் ஏற்பட்டன.
அரசியலமைப்பின் படி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உடன்பாட்டுடன் சபாநாயகரினால் சிவில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
பேராசிரியர் வசந்தா செனவிரத்ன: கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் சிரேஷ்ட பேராசிரியராகவும், மனித உரிமைகள் ஆய்வு மையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
ரஞ்சித் ஆரியரத்ன: இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தர் என்பதுடன், பல அமைச்சுக்களின் செயலாளராகப் பணியாற்றிய புகழ்பெற்ற அரச அதிகாரியாவார்.
ஒஸ்டின் பெர்னாண்டோ: ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்தவர்.