யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையுடன் இணைந்து யாழ்ப்பாண மாநகர சபை ஏன் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை? என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) கேள்வி எழுப்பியது.
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த டாக்டர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று சுட்டிக்காட்டிய நீதியரசர், வழக்குகள் மூலம் இதுபோன்ற விடயங்களை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார்.
மேற்படி மனு விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரநாத் தாபரே, திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதால் அந்தப் பகுதியில் காற்று மாசுபாடு கடுமையாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், தென்னிந்தியாவிலிருந்து வரும் கழிவுகள் காரணமாக யாழ்ப்பாணப் பகுதி கடுமையான காற்று மாசுபாட்டை சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டின் தன்மையைக் குறிக்கும் அறிக்கைகளையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மேலும் இந்த காற்று மாசுபாடு நோய்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்ட நீதியரசர்கள், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டனர்.
தயார் நிலையில் உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை நாட்டில் உரியவாறு பேணிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நாட்டு மக்களிடையே காலத்துக்கு காலம் ஏற்படும் வைரஸ் தொற்றுகள் தொடர்பில் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் ஊடாக தொடர்ச்சியாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அதனூடாக பெறப்படும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தேவையான மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டுக்கு தற்போது இந்தியாவிலிருந்து அதிக ளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எனினும், இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிபா வைரஸ் தொற்று குறித்து எவ்வித அச்சங்களும் பொதுமக்களுக்கு ஏற்படத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.