பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த கம்மடுவ கிராம மக்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்கெடெல் மற்றும் கொன்கோடியா ஆகிய கிராம மக்களே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மலையகத் தமிழ் மக்களின் காணி, வீடு,மாதாந்தச் சம்பளம் மற்றும் குடியுரிமையை
வெல்லும் வரை போராடுவோம்! வெட்கமாக இல்லையா? 200 வருடம் இந்த மண்ணுக்காக நாம் உழைத்திருக்கிறோம் என்றவாறான கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்ட களத்தில் பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.