இசை கச்சேரியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 60 பேர் பலி

இசை கச்சேரியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 60 பேர் பலி

ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 60 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நேற்றிரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 'பிக்னிக்' எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் வெடிபொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை கூறியுள்ளது.

சம்பவத்தையடுத்து கச்சேரி நடந்த கட்டிடத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். தற்போது வரை 100 பேர் கட்டிடத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இரவு முழுவதும் மீட்பு நடந்திருக்கிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி