'தமிழ் தேசிய அரசியலை வேரோடு அழிக்கும் திட்டம்!'

'தமிழ் தேசிய அரசியலை வேரோடு அழிக்கும் திட்டம்!'

பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

'தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஷா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள்.

'தங்களின் உடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப் படுத்துவதற்கா அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிராஜா சக்தி அமைப்பு. இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும்.

'கிராமங்களில் அவர்கள் பிராஜா சக்தி தலைவர்களை தெரிவு செய் கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கை யாக நிற்பவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை.

'இங்கு ஜனாதிபதி வருகின்ற போது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிராஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்துவர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'தங்களினுடைய பணிகளை வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் மேற்கொள்வதற்கே இந்த அமைப்பு செயற்படுகிறது என்று சொல்லிவிடலாம். அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் npp உடைய தலைமை கட்சியான jvp யிடம் இருப்பதனால் அது அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகம் துணை புரிவது இந்த இடத்தில் காணப்படுகிறது.

'தமிழ் தேசிய சக்திகள் இதன்னுடைய அபாயத்தை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். தமிழ் தேசிய சக்திகளை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர தேச நிர்மான அரசியலில் கவனம் செலுத்தவில்லை. எமது மக்களில் உதவிகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

'ஆகவே அந்த நலன்களை பேணவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய சக்திகளுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய சக்திகள் அதில் கவனம் செலுத்தமையால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற ஒரு நிலமையை நாங்கள் பார்க்கின்றோம். அகவே இது ஒரு அபாயமான விடயம்.

ஏனெனில் அடிமட்டத்தில் தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துகின்றது. உண்மையில் கிராமகளில் அடிமட்டமாக இருக்கின்ற அந்த அடிமட்ட மக்களை பலவீனப்படுத்துகின்ற ஒரு அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்க முனைக்கிறது.

இது தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழுக செய்கின்ற ஒரு நிலமை. இந்த விடயம் தொடர்பில் வலுவான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

எதிர்ப்பு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தமல் தேச நிர்மான அரசியலிலும் கவனம் செலுத்துகின்றபோது இந்த விடயங்களை வெற்றிகொள்ளk கூடிய நிலமை உருவாகும். இது தொடர்பான பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அல்ல. தமிழ் தேசிய சக்திகள் அனைவருக்கும் இருக்கின்றது என நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி