ஐக்கிய அரபு அமீரகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான ரமலான் மாதம் பிப்ரவரி 18 அல்லது 19ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளடக்கம்
பொது இடங்களில் உண்ணுதல் மற்றும் பருகுதல் தவிர்த்தல்:ஆடை கட்டுப்பாடு:அலுவலக நேரம்:பயணம் நேரம் திட்டமிடல்:தானம்:
இந்த புனித மாதத்தில் இங்கு வசிக்கும் இஸ்லாமிய அல்லாதவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்.
பொது இடங்களில் உண்ணுதல் மற்றும் பருகுதல் தவிர்த்தல்:
நோன்பு நேரங்களில் (சூரிய உதயம் முதல் மறைவு வரை) பொது இடங்களில் உண்பது, குடிப்பது மற்றும் புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது மற்றவர்களின் நம்பிக்கைக்கு அளிக்கும் மரியாதையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்; அங்கு சென்று உணவு உட்கொள்ளலாம்.
ஆடை கட்டுப்பாடு:
பொது இடங்களான மால், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு செல்லும் போது உடலை அதிகமாக வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்த்து, கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும்.
அலுவலக நேரம்:
ரமலான் காலத்தில் வேலை நேரம் குறைக்கப்படும். எனவே, அலுவலக கூட்டங்கள் அல்லது வேலைகளைத் திட்டமிடும்போது இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
பயணம் நேரம் திட்டமிடல்:
இஃப்தார் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகப் பயணப்பதைத் தவிர்க்கவும். அந்தச் சமயத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். முன்கூட்டியே பயணம் செய்யவும்.
தானம்:
ரமலான் மாதம் என்பது மற்றவர்களுக்கு உதவும் மாதமாகும். பல அமைப்புகள் இலவச உணவுகளை வழங்கும். இந்தச் சமயத்தில் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம்.