முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளைஞன் காணாமல் போனதாக முறைப்பாடு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளைஞன் காணாமல் போனதாக முறைப்பாடு

பாலநாதன் சதீசன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (25.01.2026) இரவு சுமார் 7மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த இளைஞன் தொடர்பான தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0701316536 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு  கேட்டுள்ளனர்.