முள்ளியவளை பொன்னகரில் மாவீரர் நினைவாக புதிதாக ஆலயம் அமைப்பு

முள்ளியவளை பொன்னகரில் மாவீரர் நினைவாக புதிதாக ஆலயம் அமைப்பு

பாலநாதன் சதீசன்

முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மாவீரர் நினைவாக புதிதாக விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு தைப்பூச நாளான நேற்றையதினம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடற்புலி மாவீரர் நல்லமுத்து நினைவாக முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் பொதுமக்களின் வேண்டுகோளிற்கிணங்க முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான ஜெகதீசனின் ஒழுங்குபடுத்தலில் சிவகுமார் விதுரன் என்பவரது முழுமையான நிதிபங்களிப்பில் குறித்த கிராம மக்களின் உதவியோடு நல்லமுத்து விநாயகர் ஆலயம் புதிதாக அமைக்கப்பட்டு உத்தியோக பூர்வமான முறையில் கும்பாபிஷேகம் மேற்கொண்டு மக்களிடம் நேற்றையதினம் (02.02.2026) கையளிக்கப்பட்டுள்ளது.

ஆலயம் கையளிக்கும் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலயத்தினை புனருத்தானம் செய்ய பங்களிப்பு செய்த உபயகாரருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், ஆலய பக்தர்களுக்கு தோத்திரபாடல் புத்தகமும் வழங்கப்பட்டிருந்ததுடன் அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் ஆலய பூசகர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், உபயகாரர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி