வலிகாமம் வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்களில் உள்ள பனை மரங்கள் படையினரால் கடந்த இரு தினங்களாக அடியோடு இடித்து அழிக்கப்படுகின்றன என்று கூறப்பசுகின்றது.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மற்றும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒருவர் தனது காணியில் நிற்கும் பனை மரத்தை தறிப்பதானாலும் பனை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றில் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் சட்டப்படி இருக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் எவரது அனுமதியும் இன்றி - நில உரிமையாளரின் ஒப்புதலும் இன்றி - பனைகளை அழித்து வருகின்றனர்.
இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் பனை அபிவிருத்திச் சபை இதுவரை மேற்கொள்ளவில்லை என நிலத்தின் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வலி.வடக்கில் விடுவிக்கப்படாத நிலங்களில் காணப்படும் பனை மரங்கள் இரு தினங்களாக படையினரால் அழிக்கப்படுவது தொடர்பில் தற்போது பனை அபிவிருத்திச் சபை, மாவட்ட அரச அதிபர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.