'புலம்பெயர் தமிழர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது!'

'புலம்பெயர் தமிழர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது!'

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்க முடியாததால் அவரின் பாரியார் சிரந்தியை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே அறிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (09ஷ) காலை 9:30 மணிக்கு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறி சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோஜ் கமகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், “இதை அரசியல் பலிவாங்களாகவே நாம் பார்க்கிறோம். இது புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதி ஒன்று நிறைவேற்றப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்க முடியாததால் அவரின் பாரியார் மற்றும் நாமலை பழிவாங்க துடிக்கின்றனர்.

“ராஜபக்ஷ குடும்பத்தையே சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் ராஜபக்ஷவை பழிவாங்க யாருக்கு ஆசை இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.

“அதனால் இவ்வாறான சிறுப்பிள்ளைத் தனமான வேலைகளை நிறுத்திவிட்டு நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்ளவும். திறைசேரியில் பணம் இருப்பதாக மார்தட்டினர். ஆனால் வழங்கப்பட்ட காசோலைகளில் பணம் இல்லையாம்.

“அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக கூறிய பணம் வழங்கப்படவில்லை.இவற்றை மறைப்பதற்காக ராஜபக்ஷவை கொண்டு செய்திகள் ஆக்க முயற்சிப்பதால் ஒன்றும் நடக்காது” என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி