இளவரசி கேட் மிடில்டனுக்கு கீமோதெரபி சிகிச்சை

இளவரசி கேட் மிடில்டனுக்கு கீமோதெரபி சிகிச்சை

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு வயது 42. இவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேட் மிடில்டனை காணவில்லை என வதந்திகள் பரவின.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கென்சிங்டன் அரண்மனை தரப்பில், இலண்டன் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 2 வாரங்கள் தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் வதந்திகள் தொடர்ந்து வந்த நிலையில், தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரியப்படுத்தி உள்ளார். ஜனவரியில் மருத்துவமனையில் இருந்தபோதுதான் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நோய் குறித்து அறிந்தவுடன் நானும் வில்லியம்சும் மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்தோம். இருப்பினும் தற்போது மீண்டு வருகிறோம். நோய் குறித்து எங்களின் குழந்தைகளிடமும் தெரிவித்துவிட்டோம்.

நான் இப்போது நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டுவர கீமோதெரபி சிகிச்சையை அதே மருத்துவமனையில் தொடர்ந்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி